one year Remembrance

Late Ponniah Kandasamy

(Retired Teacher)

Ponniah Kandasamy

Date of Birth: 20 November 1933 - Deceased: 28 March 2021

யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னையா கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்மை எல்லாம் அன்பால் அரவணைத்து

 பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எம்மை விட்டு நீண்ட தூரம்
 சென்றாலும் மறையாது அப்பா!
 
கள்ளமற்ற உங்கள் சிரிப்பினாலும்
 கபடமற்ற இரக்கமுள்ள இதயத்தினாலும்
 ஈகை செய்யும் உங்கள் குணத்தினாலும்
 கொள்ளை கொண்ட எல்லோர் நெஞ்சங்களின்
 நினைவுகளை கனவாக்கி பிரிந்து
சென்றதேனோ!
 
ஆண்டுகள் கடக்கிறது ஆனால்-நாட்கள்
போல் தெரிகின்றது உம் நினைவு
 ஆயிரம் உறவுகள் இருந்தாலும் உம் உறவுக்கு
நிகரில்லை யாருமே
 
உங்கள் நினைவுகள் அழியவில்லை
 எங்கள் கண்ணீரும் நிற்கவில்லை
அப்பா ... அப்பா ........
 
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
 எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
 கண்கள் உங்களை தேடுகின்றன!
 
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
 எங்கள் ஒவ்வொரு அசைவிலும் 
 நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
 
ஆண்டுகள் பல கோடி சென்றாலும்
ஆறாது ஆறாது உங்கள் நினைவுகள்...!
 
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org