1st Year Remembrance
Late Mr. Rasaiah Thangeswaran (Esan)
Date of Birth: 03 March 1962 - Deceased: 19 February 2018
ஒராண்டு நினைவஞ்சலி
அமரர் திரு.இராசையா தங்கேஸ்வரன்(ஈசன்)
வன்னி மாவட்டம் கற்சிலைமடுவைப் பிறப்பிடமாகவும், கனடா-ரொறன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட திரு இராசையா தங்கேஸவரன் அவர்களின் ஒராண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்காய் எல்லோருக்கும் குலவிளக்காய்
எமக்கெல்லாம் ஆசானாய் சமூகத்தின் சேவகனாய் வலம் வந்தாய்
ஏனிந்த அவசரமாய் எம்மையெல்லாம் தவிக்கவிட்டு ஏகினயோ விண்ணுலகம், ஒராண்டாய் தேடுகிறோம் எங்கும் காணாது வாடுகிறோம் உன்முகத்தை
எமையெல்லாம் வாழவைத்து எப்போதும் மகிழ்வித்த உந்தன் ஞாபகங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்க எண்ணிப் பார்க்கையில் இப்போதும் இனிக்கிறதே
இனி எப்போது வரும் எங்கள் வாழ்வில் வசந்தம் என ஏங்கித் தவிக்கிறோம்,
கூடிக் குலாவிக் குதூகலித்த நாட்களெல்லாம் உன்பிரிவால் இனியில்லை எமக்கிங்கு,
நாளும் பொழுதெல்லாம் நாம் கிடந்து தவிக்கின்றோம் நாதியற்று வாழ்கின்றோம்
உங்களின் ஆத்மா சாந்திக்காக பிராரத்திக்கும் மனைவி, பிள்ளைகள், அம்மா, ஐயா, சகோதரர்கள், உற்றார், உறவினர்கள், மற்றும் நண்பர்கள்
தொடர்புகளுக்கு:
416 847 9832
416 317 7306
www.tamilthakaval.org
