31St day Remembrance
Late Rasu Ponmalar
Date of Birth: 15 May 1949 - Deceased: 14 September 2020
யாழ் நவாலியைப் பிறப்பிடமாகவும்.நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் இராசு பொன்மலர் அவர்கள் 14-09-2020 திங்கடகிழமை அன்று இறைவனடி
சேர்ந்தார்.
அன்னாரின் கிரீமலை ஆத்மா சாந்திப்பிரத்தனை 31ம் நாள் அந்தியேட்டி வீட்டுகிருத்திய் அழைப்பிதழ்
அன்னார், காலஞ்சென்ற நாகர் மீனாச்சி தம்பதிகளின்
பாசமிகு மகளும்
திரு இராசு அவர்களின் அன்பு மனைவியும் சுபாசினி சுதாகரன் ரசீகரன் வசீகரன் கய னி சாஜினி(குடும்பநல உத்தியோகத்தர் ) ஆகியோரின்
அன்புத் தாயாரும்
ஸ்ரீ ரஞ்ன் சரிதா (ஆசிரியை ) சசிகலா துவாரகா
(கோப்பாய் ஆசிரிய கலாசாலை )சற்குணரா
விஜயகுமார் (யாழ்பல்கலைக்கழகம்)ஆகியோரின் மாமியும்
திரு தேய்வேந்திரம் மகேந்திரம் முத்துலட்சுமி மாரிமுத்து
ஆகியோரின் அன்புச்சகோதரியும்
ருஷானா மதுசிகா ரிஷ்னா பவிஷ்னா அபிஷ்னா கபீஷன் சங்கீத் சபீஸ்ணா ஹரிஷ்வின் யதிஸ்னா
பவிஷனன் நைனிஹா ஆகியரின் பேத்தியும் ஆவர்
12-10-2020. திங்கட் கிழமை அன்று காலை 08,மணியளவில் கிரீமலை தித்தக்கரையில் ஆத்மா சாந்திப்பிரத்தனை நிகழ்வுகள் 14,10,2020, அன்று புதன்கிழமை பிற்பகல்,12,மணிஅளவில் அன்னாரின் இல்லத்தில் ஆத்மா சாந்திப்பிரத்தனையிலும் அதனைத்
தொடர்ந்து நடைபெறும்
மதியபோசன நிகழ்விலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்
இங்கனம் -குடும்பத்தினர்
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து
வந்தவர்களுக்கும்,
தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
31ம் நாள் அந்தியேட்டி கிரியை.14-10-20...புதன்கிழமை
அன்று
>>>>>
அம்மா -அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
அன்பின் விருட்சமாகி எமக்கெல்லாம் நிழலாக
நின்று கருணை மழை பொழிந்து கண்ணயராது
எமையெல்லாம் காத்து, வளர்த்து வாழ்வழித்து
கலங்கரை விளக்காய் வாழ்க்கை என்னும்
ஓடத்திற்கு ஒளி காட்டி வழிகாட்டி
சீரும் சிறப்புமாக வாழ வைத்த எம் அன்னையே!
குணம் என்னும் குன்றேறி நின்று எம்மை
மகிழ்ச்சி யென்னும் மாகடலில்
திழைக்க வைத்த எங்கள் மாமியே!
கட்டியணைத்து முத்தமிட்டு பேரன்புடன்
எமையெல்லாம் வளர்த்தெடுத்த எங்கள் பாட்டியே!
கடல் கடந்து எமைக்காண ஓடோடி வந்த எம் பூட்டியே!
தரணியில் நீங்கள் தந்த அன்பு பாசம் எல்லாம்
சரித்திரத்தில்
மாறாத நினைவுகளோடு நாமும் வாழ்வோம்,
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டும்
கணவர் பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் ,
பெறாமக்கள், பேரப்பிள்ளைகள்,
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
வீட்டுமுகவரி
எல்லாளன் வீதி
நவற்கிரி மேற்கு
புத்தூர்
www.tamilthakaval.org
