4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமதி சபாரத்தினம் ஞானமணி

சபாரத்தினம்  ஞானமணி

மறைவு: 08 ஏப்ரல் 2016

                                             உதிர்வு:-08.04.2016 - நினைவஞ்சலி:- 08-04-2020        

யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும் தற்காலிக வதிவிடமாக
உரும்பிராயில் வசித்து வந்த  
அமரர்.  சபாரத்தினம்  ஞானமணி ( ஞானம் )அவர்களின் 4ம் ஆண்டு
நினைவஞ்சலி 08-04-2020 இன்று 
காலச்சுழற்சியில் நான்கு  ஆண்டுகள்  கடந்து போனாலும் இன்னும் எம்
கண்ணீர் மட்டும் ஓயவில்லை
 
 நித்தம் நாம்
 
இங்கு தவிக்கின்றோம் நீங்கள் இல்லாத துயரம் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை! ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ என்பார்கள் அது எமது அறிவுக்குத் தெரிகிறது ஆனால் எங்கள் மனதிற்கு தெரியவில்லையே! பாசத்தின் முழு உருவம் 
 
எங்கள் அம்மா 
 
எம்மை விட்டு ஏன் போனீர்கள்? என் அடுத்த பிறவியிலும் அம்மாவாய் நீங்களே வரவேண்டும் எங்கள் குடும்ப விளக்காய் எமக்கு நல்வழி காட்டி உறுதுணையாக இருந்த நீங்கள் இப்போது எம்முடன் இல்லை உங்கள் ஆத்ம சாந்திக்காக எப்போதும் இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
 
 அன்னாரின்
 
 ஆத்மாசாந்தி அடைய குடும்ப தினரும் நவக்கிரி,நிலாவரை இணையங்களும் உறவினர்கள் சுவிஸ் நவற்கிரி நண்பர்களும் இறை வனைபிராத்திக் கின்றனர் .
ஓம் சாந்தி...ஓம் சாந்தி....ஓம் சாந்தி என்றும்
 
உங்கள் நீங்காத நினைவுகளுடன் வாழும் , பிள்ளைகள் 
 
 தகவல் :-குடும்பத்தினர்

www.tamilthakaval.org