31st Day Remembrance
Late Selvarajah Kulanthaivelu
(Manager)
Date of Birth: 04 October 1928 - Deceased: 24 March 2019
மரண அறிவித்தலும் 31ம் நாள் நினைவஞ்சலியும்
31ம் நாள் நினைவஞ்சலி:
குன்றாத ஒளிவிக்கே!குடும்பத்தின் குலவிளக்கே!
பாசமுடன் உறவாடி நேசமுடன் எமை வளர்த்து
எமக்கு வாழ்வூட்டி வழிகாட்டிய தெய்வமே!
அன்பின் அரவணப்பாய் பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும் அப்பா!
என்று் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்
தகவல்:குடும்பத்தினர்
மரண அறிவித்தல்:
யாழ்.அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்வராஜா குழந்தைவேலு(மனேச்சர்) அவர்கள் 24-03-2019ம் திகதி அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூபதியம்மாவின் அன்புக் கணவரும்,
கெங்காதரன், கௌரிமதி, பகீதரன், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜனி(கிச்சி), சிவநாதன், ஜெயக்குமாரி(சசி), பாலகுமார் ஆகியோரின்
அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, தவமணி, சச்சிதானந்தம், வீரசிங்கம்,
ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
லச்சுமிப்பிள்ளை, ராசரட்ணம், கௌரி, சாந்தவதனி ஆகியோரின் மைத்துனரும்,
குமாரவேலு, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவகுரு, கண்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரனும்,
அபிர்தா, விவேக்கா, பிரவீன், சஜீன், அர்ச்சனா, பிரியங்கா, அஸ்வின்,
அச்சுதன், யஸ்மிகா, சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
