10th year Remembrance
10th death Arumugam Kanagarathinam Sivapathasundaram
(Retired Post Master,Jaffna, Sri Lanka)
Date of Birth: 07 May 1940 - Deceased: 13 November 2009
சீமைப்பெருங்காற்றும் சிந்திவிழும் சிறுகாற்றும்
வானப்பெருமரத்தை கொத்திவிடும் புயல்காற்றும்
வீசித்தொலைந்த இந்த கனடா வாழ் மண்ணிலின்று
அப்பாவின் மூச்சுக்காற்று மறைந்து பத்து வருமாச்சு!
யார்யாரென்றறிய முதல் வாசலடி தேடிச்சென்று
பேர் ஊர் தெரியாமலே உதவிகளை வாரிச்செய்து
எத்தனைக்கு தற்துணையாய் நின்ற அந்த இதயத்தை
காலன் நிறுத்தி வைத்து பத்து வருடம் பறந்து போச்சு!
எத்தனை ஆண்டுகளாய் எமை வளர்த்த திரு உருவம்
எத்தனையோ கைகளினால் எமை அணைக்கும் அருவுருவம்
ஈரைந்து ஆண்டுகள் கடந்து வந்து நாளிதனில்-காற்றில்
கரைந்து போன குரல் மட்டும் ஓயாமல் கேட்குதப்பா!
இவ்வாழ்வில் யாம் பெற்ற பெரும் வரமே அப்பா-நீங்கள்
எவ்வாழ்வும் எம் நினைவில் வரவேண்டும் அப்பா-என்றும்
நல்வாழ்வில் எமக்குரமாய் நிற்க வேண்டுமெ அப்பா-உங்கள்
ஆத்மா அமைதி பெற வேண்டுகிறோம்!
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
சகோதரர்கள்,மனைவி,பி்ளைகள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்
தொடர்புகளுக்கு:-+1 647 825 7726
அமரர் ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு-07-0501940 உதிர்வு-13-11=2009
www.tamilthakaval.org
