31st Day Remembrance Remembrance
Thavamany natkunasingam
Date of Birth: 04 March 1938 -
Deceased: 00 July 2026
இன்று அம்மாவின் 31 ஆவது நாள் நிறைவடைந்துள்ளது, அதிகாலை 5:30 மணியளவில் முகத்துவாரத்துக்கும் (மோதரை), காலை 10 மணியளவில் வீட்டு அந்தியேட்டி கிரியையும் நிறைவடைந்துள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை (22-08-2026) பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள சரஸ்வதி மண்டபத்தில் அம்மாவுக்கான ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், கல்வெட்டு வாசிப்பும் அதனைத் தொடர்ந்து மதிய போசன நிகழ்வும் இடம்பெறவுள்ளது. அம்மாவின் இறுதி நிகழ்வில் பங்குகொண்டு அழைப்பிதழ் கொடுக்க தவறியவர்கள் தயவுசெய்து இந்நிகழ்வில் பங்குகொள்ளுங்கள் ????
நெருங்கிய ஒருவரது கல்வெட்டை நாமே எழுதுவது ஒரு ஆத்மதிருப்தி உண்டு. ஏற்கனவே மூத்த அண்ணா சிவகுமாரின் கல்வெட்டு 30 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினேன், இன்று அம்மாவின் 56 பக்கங்களை கொண்ட கல்வெட்டு எழுதியதில் ஒரு மன திருப்தி.
அன்புக்குரியவரின் வாழ்க்கையை எழுத்தாகப் பதிவு செய்வது வெறும் எழுத்துப் பணியல்ல; அவர்களுடன் மீண்டும் ஒருமுறை வாழ்வது போன்றது. அதனால் தான் அந்த 56 பக்கங்களை நிறைவு செய்தபோது மனதில் ஒரு நிம்மதியும், நிறைவும் ஏற்பட்டிருக்கிறது.
கல்வெட்டின் உள்ளடக்கம் முதல் அட்டையில் கருமாரி அம்மன் படத்துடன் அம்மாவின் பெயர் இடம்பெற்றுள்ளது. அடுத்தது அம்மாவின் படம், பிறந்த, இறந்த திகதி, திதி நிர்ணய வெண்பா, திருக்குறள் "வையகத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்".
அடுத்து தோத்திர பாடல்கள் முதலில் விநாயகர் துதி அடுத்து பஞ்ச புராணங்கள், அதனை தொடர்ந்து அம்மாவின் வாழ்க்கை வரலாறு தமிழிலும் , ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது, பின்னர் ஒவ்வொருவரது இரங்கல்களும் எழுதப்பட்டுள்ளது.
அடுத்தது சிவபுராணம், திருவம்பாவை, சகலகலாவல்லி மாலை, கந்த சஷடி கவசம், பின்னர் வம்சாவளி, நன்றி நவிலல், கடைசிக்கு முதல் பக்கம் "கடைக்குட்டி மகன் செல்வகுமாரின் முகநூல் பதிவிலிருந்து..." இறுதி பக்கம் பகவத் கீதை தத்துவத்துடன் நிறைவடைந்தது.
திருமதி தவமணி நற்குணசிங்கம்
திதி ஆடி மாத வளர்பிறை ஷ்ஷ்டி
திதி நிர்ணய வெண்பா
நல்ல பராபவ வருடமா டிசேர்ந்த
வல்ல திங்கள் வளர்நலஷ்ஷ்டியிவே
தவமணி யம்மை தன்வாழ் வகன்று
சிவனடி சென்றார் கான்!
''வையகத்துன் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்''
www.tamilthakaval.org