1ம் ஆண்டு. நினைவஞ்சலி

அமரர் திலகவதி தேவி பஞ்சலிங்கம்

திலகவதி தேவி பஞ்சலிங்கம்

தோற்றம்: 25 அக்டோபர் 1938 - மறைவு: 19 ஆகஸ்ட் 2021

திதி : 07-09-2022
மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கு, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திலகவதி தேவி பஞ்சலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நிலையில்லா இவ்வுலகை விட்டு
நீண்ட பயணம் சென்றுவிட்ட
எம் அன்னையே!
நித்தமும் தவிக்கின்றோம் - நின்
பிரிவால் நீங்காது உங்கள்
நினைவலைகள் எமை விட்டு! அம்மா அம்மா என்று தினம்
அழைத்து கனவிலாவது தினம்
 காண்பதற்கு ஏங்குகிறோம் அம்மா
ஓராண்டு சென்றதுவே
ஆனாலும் எம் துயர் தீரவில்லையே! 
எல்லாமே கனவென்று
எண்ணத்தான் தோன்றிடாதா? விழிநீர் மழையாக்கி வேதனையில்
ஆழ்த்திவிட்டீர் - எம் விழிநீர்
துடைத்திட நீர் விண்ணைத்தாண்டி வருவீரா

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
 வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org