2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திருப்பதிஅம்மா நடராஜா

திருப்பதிஅம்மா நடராஜா

தோற்றம்: 02 ஜனவரி 1929 - மறைவு: 15 ஆகஸ்ட் 2020

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை, திருகோணமலை, கோண்டாவில், ஐக்கிய அமெரிக்கா New Jersey, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருப்பதிஅம்மா நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 08-08-2022

ஆண்டுகள் இரண்டாகியும்
ஆறவில்லை எங்கள்
சோகம் தாண்டிப் பல ஆண்டுகள்
போனாலும் மாறாது உங்கள் பாசம்
கூண்டுப் பறவையாக
கூடி நாம் வாழ்வதைக்கண்ட
காலன் தூண்டில் போட்டுக்
கவர்ந்தானோ எங்கள் தெய்வமே!
பத்துமாதங்கள் பக்குவமாய்
வயிற்றில் சுமந்து சத்துள்ள
உணவு வகைகளை
அறுசுவைக்குன்றாது நித்தம்
ஊட்டிவளர்த்த கண்கண்ட தெய்வமே
சத்தமில்லா உலகத்திற்கு
சென்றது எங்கே அம்மா!!
அவளருகில் இருந்தால்
அகலும் நம் நோய்நொடி
அம்மா என்பவள் ஓர் அதிசயம்
அவளே எம் இனிய
அரும்பொக்கிஷம்.....

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
 
தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org