31st Day Remembrance

Late Velayuthapillai Kangarasan

Velayuthapillai Kangarasan

Date of Birth: 27 August 1970 - Deceased: 24 July 2022

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்களின் நன்றி நவிலல்.

                                                                 அன்பிற்கு இலக்கணமாய்
அவனியில் வாழ்ந்து
பண்புடைமை காத்து
பக்குவமாய் வழி நடந்தீர்
இரக்கத்தின் இருப்பிடமாய்
ஈகை பல செய்து எல்லோருக்கும்
நல்லவராய் நாணயமாய் நடந்தீர்
ஏனோ இறைவன் இடை நடுவில்
பறித்து விட்டான்..
துன்புற்றோர் துயர் துடைத்து
துணைக்கரமாய் அடைக்கலம்
தந்த உம்மை
ஆண்டவன் ஏனழைத்தான்
பண்புள்ளோரை பல காலம்
வாழவிடக் கூடாதென்றோ?
என் செய்வோம்
இறைவன் சித்தம் இது
இனி காணமுடியாத சோகநிலையோடு
இங்கிருந்தே ஏங்கியழுகிறோம்.
மனைவி ,மக்கள் குடும்பத்தினர்.


அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
 
இங்ஙனம்:-   குடும்பத்தினர்

www.tamilthakaval.org