Mr. Soosaippillai Benjamin Arumainayakam

(Engineer (Chairman- Arumainayagam Associates, Pedro Coolers Ltd, Pedro Export Ltd)

Soosaippillai Benjamin Arumainayakam

Date of Birth: 02 November 1934 - Deceased: 11 April 2024

யாழ். வல்வெட்டித்துறை நெடியக்காட்டைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சூ.பெஞ்சமின் அருமைநாயகம் அவர்கள் 11-04-2024 வியாழக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை (சின்னத்தம்பு) - மங்களம் தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும்,

யாழ். மார்ட்டின் வீதி காலஞ்சென்ற கிறிஸ்ரியன் - யோசெபின் தம்பதியினரின் மருமகனும்,

மேள் திரேஸ் புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவரும்,

இமானுவேல் இளங்கோ, மைக்கல் இளஞ்சேரன், கிறிஸ்ரலின் வாசுகி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மேரிராணி, சேவியர் குலநாயகம், காலஞ்சென்ற மேரி ஜெய நாதன், விகரா் தனிநாயகம் (அவுஸ்திரேலியா), மேரி நிர்மலா ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான லெறி, லசல்ஸ் மற்றும் திருமதி. லினெற் இரத்தினசிங்கம், காலஞ்சென்ற அமிர்தராஜா, யோகராஜா, திருமதி. இமாகுலெற் நீக்கலஸ், சுகிர்தராஜா, குணராஜா, திருமதி. ஜீன் ஈஸ்வரி ராஜன், காலஞ்சென்ற R.E.C. ஜெயராசா, தேவஜோதி குலநாயகம், காலஞ்சென்ற அன்ரனி ஜெயநாதன், Dr. சுசிலா (அவுஸ்திரேலியா), அருச்சனா ஆகியோரின் மைத்துனரும்,

பெனீற்றா, ஜேசன் ஆகியோரின் மாமனாரும்,

சங்கீதா, திலீபன், நைலா, அக்கிலா, ரூபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் புகழ் உடல் பார்வைக்காக 19-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 20-04-2024 சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் முற்பகல் 10.00 மணி வரையும் St. John's Dixie Cemetery & Crmatorium (737-Dundas Street East, Mississauga, ON, L4Y 2B5) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து முற்பகல் 10.30 மணியளவில் Sts. Martha and Mary Parish (1870 Burnhamthorpe Road East, Mississauga, ON, L4X 2S5) இல் நல்லடக்க ஆராதனை நடைபெற்று, Assumption Catholic Cemetery (6933 Tomken Road, Mississauga, Ontario, L5T 1N4) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/04/2024 00:00)