எம்மைப்பற்றி:

இணையதளம் "Tamilthakaval.Org" 2018ம் ஆண்டு அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்தில் ஸ்தாபிக்கப்பட்டு எமது தமிழ் சமூகத்தைச் சேர்ந்த எவரும் உலகெங்கும் பரந்து வாழும் உறவினருக்கு தம் உற்றாரின் பிரிவுத் துயர், நினைவஞ்சலி மற்றும் விசேட, முக்கிய அறிவித்தல் போன்றவற்றை  உடனுக்குடன் எந்த ஒரு பிரத்தியேக கட்டணச் செலவுமின்றி, முற்றாக இலவசமாகப் பிரசுரிக்க உதவ வேண்டும் என்ற ஆர்வத்துடன் முழுநோக்காகப் பணியாற்றி வருகிறது.
 
இவ் இணையத்தை பராமரிப்பதற்கு முன்னின்று உதவும் பல தொண்டர்கள், செய்தியாளர்களுக்கும், தாமாகவே செய்திகளை பதிவிடுவோர்க்கும் ஏற்படக்கூடிய தேவைகளுக்கு மேலதிக உதவிக்கரம் நீட்டி பதிவுகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
 
இணையத்தின் நோக்கை மேலும் மிகைப்படுத்த உங்கள் அனைவரினதும் ஆதரவினை நல்குகிறோம்.
 
தொடர்புகளுக்கு:
 
மின்னஞ்சல் - info@tamilthakaval.org
 

எமது சேவைகள்:

உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் மரண அறிவித்தல்களை இலவசமாகப்  பிரசுரிப்பதற்கு  நாம்  இச்சேவையை உங்களுக்கு உவந்தளிக்கின்றோம், மேலும்  நினைவஞ்சலிகள், முக்கிய அறிவித்தல்கள்  போன்றவற்றையும்  உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளை சென்றடைவதற்கான  வசதிகளையும் எமது இணையத் தளத்தில் இணைத்துள்ளோம்.
 
இச்சேவையை  உரியநேரத்தில் வெற்றிகரமாக அளிப்பதற்கு கீழ்வரும் முக்கிய  விபரங்களை தவறாமல் தருவிக்கவும்.  மேலதிக உதவிகள் தேவைப்படின் தயவுசெய்து எம்மை தொடர்பு கொள்ளவும் இந்த மின்னஞ்சல் ஊடாக "info@tamilthakaval.org".
 
 
மரண அறிவித்தல்/ நினைவாஞ்சலி தருபவர் சமர்ப்பிக்க வேண்டியவை:
 
  •   உங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கம் 
  •   உங்களை சுலபமாக தொடர்புகொள்வதற்கான தொலைபேசி இலக்கம் 
  •   உங்கள் முழுப்பெயரும் வீட்டுத்தபால் முகவரியும் 
  •   இறந்தவரின் இறப்பு சான்றிதழ்
  •   இறந்தவரின் உருவப்படம் (கிடைக்காவிட்டால் நாம் பூவொன்றை பதிவு செய்வோம்)
  •   சிறந்த முறையில் தொகுக்கப்பட்ட இறந்தவரின் செய்தி (சொற்களுக்கு வரையறை இல்லை எனினும் செய்தி சுருக்கமாக இருக்க எதிர்பார்க்கப் படுகிறது)
தகவல் தரும் வழிகள்:

  •   உங்கள் வசதிக்காக மாதிரி விண்ணப்பப் படிவம் ஒன்றை இணைத்துளோம். இப்படிவத்தை கணினி மூலம் நீங்கள் இணையத்தளத்தில் இருந்தவாறே உங்களைப்பற்றிய தரவுகளையும், செய்தியையும் நிரப்புவதுடன், புகைப்படம் , மரணச்சான்றிதழ்  போன்றவற்றையும் பிரதியெடுத்து (Scan ) இணைத்துவிடலாம்.
     
  •   மாற்றாக, மேல்கூறிய மாதிரி விண்ணப்பப்படிவதில் கேட்டவற்றை தெளிவாக கைப்பட எழுதி, புகைப்படம் , மரணச்சான்றிதழ்  போன்றவற்றவற்றுடன் சேர்த்துப்  பிரதியெடுத்து (Scan ) எமது "info@tamilthakaval.org"   என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 
     

விதிமுறைகளும் நிபந்தனைகளும்:

  •    பிரசுரிக்கப்படும் அறிவித்தலுக்கான முழுப் பொறுப்பும் உங்களைச் சார்ந்தது.
  •    எமக்கு தரப்படும் தகவலில் உள்ள விபரம் தெளிவற்று இருந்தாலோ, அல்லது  அவ்விபரத்தை  உறுதிசெய்வதில் சிக்கல் இருந்தாலோ அவ்வறிவித்தல் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
     
  •   உங்களைப் பற்றியோ அல்லது உங்கள் தகவலிலோ சந்தேகமிருப்பின் அதை உறுதி செய்வதற்கு உங்களிடம் மேலதிக தரவுகள் கேட்க நேரிடும்.
  •   அறிவித்தலில் தகவல் தருபவரின் தொலைபேசி மற்றும் முகவரி என்பன  இணைக்கவும்  நேரிடலாம்.
  •   அறிவித்தலில் விளம்பரம், இணையத்தள இணைப்பு அல்லது மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணைக்க முடியாது.
  •   தொழில்நுட்பச் சிக்கல் ஏதேனும் ஏற்படின் அறிவித்தல் பிரசுரிப்பதில் ஏற்படும் தாமதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.