Mrs. Abhirami Easwara Narthana

Abhirami  Easwara Narthana

தோற்றம்: 21 செப்டம்பர் 1960 - மறைவு: 08 ஆகஸ்ட் 2020

நியூ ஜேசி, பெல் மீட் இல் வாழ்ந்து வந்த திருமதி. அபிராமி ஈஸ்வர நர்த்தனா அவர்கள்,

சனிக்கிழமை, ஆகஸ்ட் 08, 2020, அன்று ஒரு குறுகிய சுகவீனத்தின் பின்னர் இந்த உலகை விட்டு அமைதியாகப் பிரிந்தார்.
 
அன்னார் சுப்ரமணியம் ஈஸ்வர நர்த்தனா அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,
 
சுபன், அமுதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
Dr. ஜெரமையா, திருமதி. ரட்னதேவி சிதம்பரநாதன் (ஆக்லன்ட், நியூ சீலாந்து) தம்பதிகளின் அன்பு மகளும்,

இலங்கை உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. அருணாசலம், திருமதி. குகனேஸ்வரி சுப்ரமணியம் அவர்களின் அன்பு மருமகளும்,
 
இலங்கை, யாழ், வண்ணார்பண்ணை ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற
Dr.ராஜேந்திரம் திருமதி. சிவகாமி ஜெரமையா, காலஞ்சென்ற திரு. தம்பியப்பா திருமதி.பராசக்தி செல்வரட்னம் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
 
Dr. கல்யாணி (மெல்போன், அவுஸ்த்ரேலியா), ரஞ்சனி (டார்வின், அவுஸ்த்ரேலியா), குமரன் (ஆக்லன்ட், நியூ சீலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

முருகானந்தம் (மெல்போன்), நாகேந்திரா (டார்வின்), காயத்ரி (ஆக்லன்ட்) ஆகியோரின்
மைத்துனியும்,
 
திருமணத்தின் மூலம் Dr. காந்தன்(ஐக்கிய அமெரிக்கா), ஹரன் (ஐக்கிய அமெரிக்கா),
Dr.கௌரி நடராஜா (ஐக்கிய அமெரிக்கா), ரூபன் (பிரித்தானியா), ஜனனி சிவலோகநாதன் (பிரித்தானியா),ரமணன் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்ற திருமதி. சத்தியபாலதேவி நவரட்ணம், திருமதி. சரோஜாதேவி
கணேசதாசன் (ஐக்கிய அமெரிக்கா), திரு. செல்வரட்ணம் ராகவன் (இலங்கை), திருமதி.
சிவபாக்கியம் பசுபதி (நியூ சீலாந்து), காலஞ்சென்ற திருமதி. சீதாதேவி கங்காதரன்,
காலஞ்சென்ற திரு. ஜெரிமையா பத்மநாதன், காலஞ்சென்ற திருமதி. கமலாதேவி
சண்முகராஜன், திரு. ஜெரிமையா விஸ்வநாதன் (இலங்கை) ஆகியோரின் மருமகளும்
ஆவார்.
 
அபிராமி, புரட்டாதி 21, 1960 இல் பிரித்தானியாவில் வேல்ஸ் (Wales) மாநிலத்தில்
உள்ள அபேஸ்ர்வித் (Aberystwyth) என்ற இடத்தில் பிறந்து, இலங்கை, நியூ சீலாந்து
ஆகிய இடங்களில் வாழ்ந்து, ஐக்கிய அமெரிக்காவில் வதிவிடம் கொண்டார்.

நியூ ஜேசியில் உள்ள தற்போதைய உடல்நல கட்டுப்பாடுகளுக்கு அமைய கவலையில்
ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர் அபிராமிக்கு தனிப்பட்ட முறையில் கிரியைகளை வரும்
வியாழக்கிழமை, ஆகஸ்ட், 13, 2020, காலை 9 மணியளவில் நடாத்த உள்ளார்கள்.
 
தங்கள் அன்பையும் ஆதரவையும் தெரிவிக்க விரும்புவோர் மலர்களுக்குப் பதிலாக
அபிராமியின் ஞாபகார்த்தமாக, நியூ ஜேசி தமிழ் கலை கலாச்சார மன்றத்தின்,
இலங்கையில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் செயற்பாடுகளுக்கு
நிதியுதவியாக வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
(நியூ ஜேசி தமிழ்கலை கலாச்சார மன்றத்தின் காரியதரிசி Dr. நகுலேஸ்வரன்  அவர்களுடன் தொடர்புகொள்ளவும் 1-908-200-9334, nagules@gmail.com)
 
திருமதி. அபிராமி ஈஸ்வர நர்த்தனா அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.
 
தொடர்புகளுக்கு:-
 
சுப்ரமணியம் நர்த்தனா (USA): narthana@live.com   
Dr. & Mrs. சிதம்பரநாதன் (New Zealand): sithafamily@gmail.com





Obituary Notice of Mrs. Abhirami Easwara Narthana  


On Saturday August 8, 2020, Mrs. Abhirami Easwara Narthana, of Belle Mead, New Jersey, peacefully departed this world after a short period of illness.

She is the beloved wife of Subramaniam Easwara Narthana,

Loving mother of Suban and Amuthan,

Daughter of Dr. Jeremiah and Mrs. Ratnadevi Sithamparanathan (Auckland, New Zealand),

Daughter-in-law of late Mr. Arunasalam and late Mrs. Kuganeswary Subramaniam of Urumpirai, Sri Lanka,

Granddaughter of late Dr. Rajenthiram and late Mrs. Sivakami Jeremiah, and late Mr. Thambiappa and late Mrs. Parasakthy Selvaretnem, both families from Iyanarkoviladdy, Vannarponnai, Jaffna, Sri Lanka.

Abhirami is the sister of Dr. Kalyani (Melbourne, Australia), Ranjani (Darwin, Australia) and Kumaran (Auckland, New Zealand),

Sister-in-law of Muruganantham (Melbourne), Nagendra (Darwin) and Kayathri (Auckland).

Through her marriage, she is the sister-in-law of Dr. Khanthan (USA), Haran (USA), Dr. Gowri Nadaraja(USA), Rupan (UK), Janani Sivaloganathan(UK) and Ramanan (USA).

She is also the niece of late Mrs. Sathiabaladevi Navaratnam, Mrs. Sarojadevi Kanesathasan (USA), Mr. Selvaretnem Raghavan (Sri Lanka), Mrs. Sivapackiam Pasupathy (New Zealand), late Mrs. Sitadevi Gangatharan, late Mr. Jeremiah Pathmanathan, late Mrs. Kamaladevi Shanmugarajan and Mr. Jeremiah Viswanathan (Sri Lanka).

Abhirami was born on September 21, 1960 in Aberystwyth, Wales, UK., and lived in Sri Lanka and New Zealand before settling in the USA.

Due to the current health restrictions in New Jersey (USA), the grieving family has planned a private funeral for Abhirami at 9 am Eastern Standard Time (USA) on Thursday, August 13, 2020.

For anyone that wishes to express their love and caring, the family respectfully asks that in lieu of flowers, kindly donate in memory of Abhirami to New Jersey Tamil Arts and Cultural Society (NJTACS) for charitable activities for the needy in Sri Lanka (please contact NJTACS Secretary Dr. Naguleswaran, 1-908-200-9334, nagules@gmail.com for details). 

May the soul of Mrs. Abhirami Easwara Narthana rest in peace. 


For details:
-

Subramaniam Narthana (USA): narthana@live.com
Dr. & Mrs. Sithamparanathan (New Zealand): sithafamily@gmail.com 

www.tamilthakaval.org


"My Heartfelt condolence to you and your family. May her good soul Rest In Peace."
- Vimala Rajadeva (New Jersey, 18/08/2020 05:18)
"We are shocked and deeply saddened by the loss. Her unique, beautiful, devotional voice will remain in our hearts forever. Our sincere thoughts and prayers are with the family. May her soul rest in Peace! Sairam!!"
- Devaki & Chandran (NJ, USA, 15/08/2020 08:54)
"Our sincere condolences to Narthana, sons and extended family. May her soul attain moksha."
- Indrani Sivagnanam (United Kingdom, 15/08/2020 03:49)
"Please accept our deepest condolences. May her soul Rest in Peace. "
- Nagules & Sumi (United States, 15/08/2020 01:06)
"திருமதி அபிராமி நர்த்தனா அவர்களிற்கு நியூ ஜெர்சி தமிழ் கலை கலாச்சார மன்றம் (New Jersey Tamil Arts & Cultural Society) தனது கண்ணீர் காணிக்கையை செலுத்துகின்றது. திருமதி அபிராமி நர்த்தனா அவர்கள் நியூ ஜெர்சி தமிழ் கலை கலாச்சார மன்றத்தின் ஓர் வாழ்நாள் உறுப்பினர் மட்டுமல்லாது அவர் எமது மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற தமிழ் பாடசாலையின் ஆரம்பகால ஆசிரியருமாவார். இறைவன் அவருக்கு கொடையாக அளித்த சங்கீத ஆற்றலாலும் தனது வசீகர குரலினாலும் எமது தமிழ்க் குழந்தைகளிற்கு சங்கீத கல்வியை மிகவும் நன்றாக கற்பித்திருந்தார். சங்கீதம் கற்பித்தலோடு தனது சேவையை நிறுத்திக்கொள்ளாது எமது தமிழ்ப் பாடசாலை பிள்ளைகளின் ஆற்றல்களையும் திறமைகளையும் பல்வேறுபட்ட மேடை நிகழ்வுகளினூடாக வெளிக்கொணர்வதில் திருமதி அபிராமி நர்த்தனா அவர்களிக்கு நிகர் வேறு யாருமில்லை. திருமதி அபிராமி நர்த்தனா அவர்களிடம் சங்கீதம் பயின்ற மாணவர்களே அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள் என்பதில் மிகையேதுமில்லை. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரிற்கும் எமது மன்றத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அவர்கள் அனைவரது துயரிலும் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றோம். திருமதி அபிராமி நர்த்தனா அவர்களது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி "
- New Jersey Tamil Arts & Cultural Society (USA, 14/08/2020 16:49)
"Our deepest sympathies in the loss of your loving Abi. May her loving memories give you strength. May her soul Rest In Peace "
- Asokan & Dolly Paramanathan  (USA , 14/08/2020 16:00)
"You may be physically left but your sweet soft voice will ring in our ears forever. Thankful to the volunteer service at NJTACS as a dedicated music teacher. We will miss you."
- Mahilkanthan Family (USA, 14/08/2020 12:44)
"I am deeply saddened by the news of your loss. May Sai keep Abi by his side and give you all comfort and strength through this difficult time. Our most sincere condolences, Ranjini and the Chitsabesan family. "
- Ranjini Chitsabesan (UK, 13/08/2020 23:31)
"Our heartfelt condolences to Narthana and family. Our thoughts and prayers are always with you all in this difficult moment. .. "
- Yogesh & Mekala Pushparajah  (New Zealand, 13/08/2020 15:19)
"So sorry for your loss. We will miss Abi. May her soul Rest In Peace. Our heart felt condolences. "
- Rohini and Prasad  (USA, 13/08/2020 05:04)
"Please accept my deepest condolences for your family's loss."
- Selvi Thirumoolan  (London United Kingdom , 13/08/2020 03:55)
"Our heartfelt condolences to the families. May her soul Rest In Peace."
- Siva & Shantha  (Sydney Australia , 12/08/2020 19:54)
"Deepest sympathy "
- Mahespara Sakthivel (Sri Lanka, 12/08/2020 17:35)
"Our deepest sympathy and prayers to you and your family"
- Sothi Anandamohan (United States, 12/08/2020 15:42)
"Abhi is the most pleasant and nicest person we have ever met. She'll be in our hearts forever."
- Indrany, Jayakumaran, Jenani and Jeyanthan (USA, 12/08/2020 15:06)
"Our deepest condolences to you and sons. May her soul rest in peace. "
- Rishindran (United States, 12/08/2020 15:03)
"Please accept our deepest sympathies. May her soul rest in peace."
- Vythehi and Ravi (Ireland, 12/08/2020 07:08)
"அபி அக்காவின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம். நர்த்தனா அண்ணா, பிள்ளைகள், சிதம்பரநாதன் பெரியப்பா, ரத்னா சின்னம்மா, கல்யாணி அக்கா, ரஞ்சனி அக்கா, குமரன் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். - பிரார்த்தனையுடன் நேசன், பாமினி, சான்றோன், சேந்தன்."
- நேசானந்தர் சுந்தர்ராசா (Canada, 12/08/2020 05:58)
"Rest In Peace Our heartfelt condolences Nandakumar&Nandhini"
- Nandhini Nandakumar (USA, 12/08/2020 04:19)
"ILANKAI TAMIL SANGAM USA is saddened by the sudden demise of our dear friend Abirami. She was greatly loved, respected, and admired. May her soul rest in eternal peace. Please accept our deepest sympathies. Nadarajah Rajendra, President, ILANKAI TAMIL SANGAM USA"
- NADARAJAH RAJENDRA (United States, 12/08/2020 00:39)
"Please accept our deepest sympathies."
- S.Jeyavarman FCA (Colombo, Sri Lanka, 12/08/2020 00:28)
"Please accept our deepest sympathies. May her soul Rest In Peace."
- SRIBAVAN (Bavan) (USA, 11/08/2020 18:55)
"Our thoughts and prayers are with fthe amily. May her soul rest in peace."
- Ganesh and Viji (USA , 11/08/2020 15:55)
"Please accept our deepest sympathies... our thoughts and prayers are with the family. May her soul Rest In Peace.... "
- Mano & Nalayini (USA, 11/08/2020 15:40)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2020 08:00)