திரு. அம்பலம் ஞானதுரை

(ஓய்வு பெற்ற ஆசிரியர்- இணுவில் இந்துக் கல்லூரி, தீர்த்தத் திருவிழா உபயகாரர், இணுவில் கந்தசுவாமி கோவில்)

அம்பலம் ஞானதுரை

தோற்றம்: 30 மார்ச் 1933 - மறைவு: 09 டிசம்பர் 2021

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில், நியூசிலாந்து- ஓக்லந்து, அவுஸ்திரேலியா- சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட  அம்பலம் ஞானதுரை அவர்கள் 09-12-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் (அம்பலவாணர்) குஞ்சிப்பிள்ளை தம்பதிகளின் இளைய புதல்வரும்,

ஐயாத்துரை பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி அவர்களின் அருமைக் கணவரும்,

காலஞ்சென்ற அருந்தயாபரன் (நியூசிலாந்து), தயாநந்தி- திருநந்தகுமார், கிருபாநந்தி- கந்தராஜா, கலைச்செல்வி- உதயகுமாரன், விவேகானந்தி- கந்தகுமாரன், மயூரானந்தி- சுரேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திருச்செல்வகுமாரி- ஜனநாயகம் (நந்தா), திருநந்தகுமார், காலஞ்சென்ற திருநந்தகுணாளன், திருகுகசக்தி- அருணாசலம் ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

காலஞ்சென்றவர்களான வத்சலா, செந்தில்குமார் மற்றும் குலமதி கலாதரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

கீதா- அருந்தயாபரன், கந்தராஜா, உதயகுமாரன், கந்தகுமாரன், சுரேஷ், மிதுலா- பகீரதன், மிருணன், நித்திலா-இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கணபதிப்பிள்ளை, பவளரத்தினம் திருநாவுக்கரசு ஆகியோரின் இளைய சகோதரரும்,

பாலச்சந்திரன், லதாராணி, இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சிவேஸ்வரதம்பி, சித்திரா இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

வேதகி, அபிராமி, பிரசாந்த், ஆதித்தன், பிரணவன், பிரனோஜன், காருண்யா, கபிலன், துளசி, சாயிராம், கீர்த்திகன், மைதிலி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16-12-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் ருக்வுட் (South Chappel, Rookwood Cemetery, NSW) நிலையத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் பி.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரிகைகள் நடைபெற்று மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

இராணி மாளிகை, காங்கேசந்துறை வீதி, இணுவில் மேற்கு, இலங்கை.
31 Fitzwilliam Road, Toongabbie, NSW 2146, Australia.
 
Zoom Link:- Click Here
Meeting ID: 788 963 6705
Passcode: 161221 

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2021 05:28)