திருமதி. ஆனந்தகுமாரசாமி சரோஜாதேவி

(முன்னாள் தேயிலை ஆராய்ச்சி நிலையம், தலவாக்கலை)

ஆனந்தகுமாரசாமி சரோஜாதேவி

மறைவு: 09 ஜனவரி 2025

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் மருதடியைப் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆனந்த குமாரசாமி சரோஜாதேவி அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று காரைநகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நயினாதீவு ஐயாத்துரை (முன்னாள் அதிபர்) -  பார்வதி தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியும்,

காலஞ்சென்ற அருளையா (விதானையார்) - நாகரத்தினம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,

கலாநிதி ஆனந்தக்குமாரசாமி அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பாஸ்கரன், பானுமதி மற்றும் சிவபாலன், காந்திமதி, பிரேமாவதி, ஸ்ரீதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சிவபாதம் (சிங்கபூர்), நமசிவாயம் (மாஸ்டர்- காரைநகர்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-01-2025 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது மருதடி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2025 05:00)