திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம்

(ஓய்வுநிலை அதிபர் யாழ் இந்துக் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி)

அப்பாத்துரை பஞ்சலிங்கம்

தோற்றம்: 08 ஜனவரி 1936 - மறைவு: 28 டிசம்பர் 2025

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அப்பாத்துரை பஞ்சலிங்கம் அவர்கள் 28-12-2025 ஞாயிற்றுக்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாத்துரை - இரத்தினம்மா தம்பதியரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவகுரு - சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி (ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும், 

நிரஞ்சன் (கனடா), நிருபா (ஆசிரியை - அச்சுவேலி மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பிரஷாந்தி (கனடா), அருந்தவ ம்(ஆசிரிய ஆலோசகர் - வலிகாமம் கல்வி வலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நவநீத், பிரஜீத், மதுரா, ரூபிகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், மற்றும் செல்வநாயகி (இலண்டன்)  ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2025ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் அவரது இல்லத்தில் ஆரம்பித்து தொடர்ந்து பூதவுடல் உரும்பிராய் கிட்ஸ் பார்க்கில்  அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தகனக்கிரியைக்காக உரும்பிராய் இளங்காடு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/12/2025 04:02)