திரு. அருள்ராஜ் சுவேந்தன்

அருள்ராஜ் சுவேந்தன்

தோற்றம்: 27 அக்டோபர் 2001 - மறைவு: 30 டிசம்பர் 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறன்ரோ மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அருள்ராஜ் சுவேந்தன் அவர்கள்கடந்த 30-12-2024 திங்கட்கிழமை அன்று மொன்றியலில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

அன்னார், அருள்ராஜ் (ஆசிரியர் - யாழ்/பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரி) -  யமுனா (சமுர்த்தி முகாமையாளர் - சண்டிலிப்பாய பிரதேச செயலகம்) தம்பதியினரின் பாசமிகு மகனும்,

சதுர்த்திகன் அவர்களின் பாசமிகு சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம்-புஸ்பராணி, காலஞ்சென்றவர்களான அருளம்பலம்-இரத்தினேஸ்வரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

விஜயடேஸ்வரன்-நகுலாம்பிகை ஆகியோரின் பெறாமகனும்,

கோதீஸ்வரன்-சியமளா, சுரொஸ்வரன்-தாரணி, யோகேஸ்வரன்- அருந்ததி, ஞானேஸ்வரன்-சுகந்தினி ஆகியோரின் அன்பு மருமகனும்,

யானுஷன் அவர்களின் உடன் பிறவா சகோதரனும்,

டிலானி, டிஷானி, துஸான், கிஸான், நிகேதன், ஜனனி, பிரவீனா, திலக்ஷனா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் Aeterna Funeral Home (55 Rue Gince, Montreal) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் (இலங்கை நேரம் இரவு 7:30) புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/01/2025 10:25)