திரு. சந்திரகுமார் மங்காம்பிள்ளை

(நியூ காயத்திரி ஜீவலர்ஸ் - நீர்கொழும்பு)

சந்திரகுமார் மங்காம்பிள்ளை

தோற்றம்: 06 டிசம்பர் 1971 - மறைவு: 12 மே 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் பெரம்பலூர், புதுவிராலிபட்டியைச் சேர்ந்த திரு. ம. சந்திரகுமார் அவர்கள் 12-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கிரியுள்ளை மங்காம்பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

வத்தளை தியாகராஜா - காலஞ்சென்ற மனோகரி தம்பதியினரின் மருமகனும்,

புதுவிராலிபட்டி காலஞ்சென்ற ராமசாமி பிள்ளை - காமாாட்சி அம்மாள், புப்புரெஸ்ஸ காலஞ்சென்ற அருணாசலம் பிள்ளை - செல்லம்மாள் ஆகியோரின் அன்பு பேரனும்,

நர்மதா அவர்களின் அன்புக் கணவரும்,

யஷ்மிதா, மங்கேஷ்கர், ரக்‌ஷிதா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

பவானி, சந்திரமதி (கலா), தாமரைச்செல்வி (திலகா) ஆகியோரின் அன்பு சகோதரனும்,

பாலசுப்பிரமணியம் (சூரியா டிரேடிங் கம்பெனி - கொழும்பு -12), காலஞ்சென்ற கதிரேசன் (ஶ்ரீ ராம் ஓட்டோ மொபைல் - கொழும்பு - 14), ராம்குமார் (சதீஷ் - ஜெயஶ்ரீ எண்டபிரைசஸ் - கொழுமபு -12) ஆகியோரின் மைத்தனுரும்,

பாமினி, திவ்யா ஆகியோரின் கொழுந்தனாரும்,

திருச்சி ஏகாம்பரம், சுந்தர்ராஜன் ஆகியோரின் தம்பியும், முசாந்தன், சஞ்சிவன், அக்‌ஷிதா, அஸ்வின், அவினேஸ், கிரிஷாந்தன், நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாய் மாமவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 13-05-2024 திங்கட்கிழமை அன்று நீர்கொழும்பு இல்லத்தில் இரவு 7.30 மணி முதல் வைக்கப்பட்டு, 15-05-2024 புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:

இல-12/5, குண்டன்வில ரோட், ருக்மணி தேவி மாவத்தை,

நீர்கொழும்பு.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/05/2024 04:00)