திருமதி தனலட்சுமி சோமசுந்தரம்
தோற்றம்: 01 செப்டம்பர் 1939 - மறைவு: 01 ஆகஸ்ட் 2020
யாழ்.காரைநகர் இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்,காரைநகர் களபூமியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்து தற்போது யாழ்ப்பாணம்,திருநெல்வேலியில் வசித்து
வந்தவருமாகிய திருமதி தனலட்சுமி சோமசுந்தரம் அவர்கள் 01-08-2020ம் திகதி சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான வீரகத்தி ஆறுமுகம் சுப்பிரமணியம்-சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தர்ப்பர் வைத்திலிங்கம்-இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வைத்திலிங்கம் சோமசுந்தரம்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தனபாலசிங்கம் சோமசுந்தரம்(ஆசிரியர்-றோயல் கல்லூரி ,கொழும்பு),திருமதி விஜயலட்சுமி முருகானந்தம்,காலஞ்சென்ற மகாலட்சுமி சோமசுந்தரம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசம்பு முருகானந்தன்(உரிமையாளர்-முருகானந்தம் ஸ்ரோஸ்,யாழ்ப்பாணம் ) அவர்களின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம்,பரமேஸ்வரி,சங்கரப்பிள்ளை,ஆறுமுகம்,இந்திராணி,
கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சோபிதா,சௌமியா,அக்ஷயா, வைஷ்ணவி ஆகியோரின் அன்புப் பேர்த்தியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-08-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இல.185 பிறவுண் வீதி,யாழ்ப்பாணத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்று
பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- தனபாலசிங்கம்-மகன்
தொடர்புகளுக்கு:-
மகன்-+94 77 779 4324
மகள்- +94 77 858 6565
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2020 06:18)
