திரு. எட்வேட் பூபாலசிங்கம் (ரெத்தினம் சம்மாட்டி)
மறைவு: 22 நவம்பர் 2026
மன்னார் - விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் மூர்வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. எட்வேட் பூபாலசிங்கம் அவர்கள் 22-11-2026 ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக இறைபதமடைந்தார்.
அன்னார், காலம்சென்ற தேவசகாயம் - றோசம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலம்சென்ற மரியநாயகம், மரியராணி ஆகியோரின் சகோதரனும்,
காலம்சென்ற அடைக்கலமுத்து அவர்களின் கணவரும்,
விஜிதா, சுகந்தினி (உப அஞ்சல்அதிபர் - பெரியமடு), சுஜாதா மற்றும் குமுதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
