திரு. இராசையா கணேசநாதன்

(இலங்கை மின்சார சபை மற்றும் கனடிய அணுமின் நிலையங்களில் மூத்த பொறியாளர்)

இராசையா கணேசநாதன்

மறைவு: 14 டிசம்பர் 2024

யாழ். கல்வியன்காடு ஞான பாஸ்கர வீதியை பிறப்பிடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இராசையா கணேசநாதன் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

யசோதி அவர்களின் அன்புக் கணவரும்,

வக்சிதாவின் பாசமிகு தந்தையும்,

காந்திமலர், காலஞ்சென்ற கனகாம்பிகை, ஜெகதீஸ்வரன், கமலநாதன், காலஞ்சென்ற கமலவேணி, ஜெகதீஸ்வரி, தில்லைநாதன், சரஸ்வதி, மகேஷ்வரி, பாக்கியநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

இவர் இலங்கை கட்டுப்பத்தை பல்கலைக்கழகத்தில் இளநிலை(B.Sc) பட்டத்தினையும், மற்றும் கனடாவின் மொன்றியலில் உள்ள மக்கல் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டத்தினையும்(MSc) பெற்றார். இவர் இலங்கை மின்சார சப மற்றும் கனடிய அனுமின் நிலையங்களில் மூத்த பொறியிளராக பணியாற்றினார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2024 சனிக்கிழமை நண்பகல் 12:00 - 4:00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-12-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 - 4:00 பார்வைக்காவும், இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"We are very sorry to hear this sad news. Ganesh anna you are a regular SKY yoga meditator and lead a very healthy spiritual life style. Our prayers for your soul to rest in peace. I met you at Ananthas aathma shanthi pooja. Thank you. Our deepest sympathies to all your loved ones. "
- Suguna Ananthanadesan (Canada, 18/12/2024 10:03)
"Our deep condolences to the bereaved families.We pray for his soul rest in peace. Varadarajan and Usha"
- Varadarajan Krishnaswami (India, 18/12/2024 06:47)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/12/2024 05:00)