திரு. கோவிந்தசாமி ரவீந்திரநாதன்
தோற்றம்: 25 அக்டோபர் 1958 - மறைவு: 09 அக்டோபர் 2024
கொழும்பு-13, சூறோட், இல-63 யை வசிப்பிடமாகக் கொண்ட திரு.கோவிந்தசாமி ரவீந்திரநாதன் அவர்கள் 09-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி-அன்னபூரணி தம்பதியினரின் அன்பு மகனும்,
சுபாஷினி அவர்களின் அன்புக்கணவரும்,
கனிஷ்க, டிலக்ஷன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 11-10-2024 வௌ்ளிக்கிழமை முதல் இல- 162 E. W. பெரேரா மாவத்தை, புஞ்சி பொரளை, கொழும்பு-08 (Lanka Florists) மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
