டாக்டர். இளையதம்பி செல்வநாயகம்

(கருணா கிளினிக் - சங்கானை)

இளையதம்பி செல்வநாயகம்

தோற்றம்: 18 ஜனவரி 1940 - மறைவு: 13 பெப்ரவரி 2025

யாழ். தெல்லிப்பளை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், தேவலாய வீதி சங்கானையை வசிப்பிடமாகவும்  கொண்ட திரு. இளையதம்பி செல்வநாயகம் அவர்கள் 13-02-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி - தங்கமுத்து தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்ற செல்லப்பா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் (கலாஜோதி புத்தகசாலை), இராஜநாயகம் (துர்க்கா மரக்காலை - சண்டிலிப்பாய்) மற்றும் அரியநாயகம் (ஆதுரா கிளினிக் - மட்டக்களப்பு) ஆகியோரின் சகோதரனும்,

பாலமுரளி (கனடா), பாலகருணா (கருணா அழகுமாடம் - சங்கானை), பாலஜீவன் (வெஸ்ரன் பாமசி - சங்கானை), கலைமகள் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிளா (கனடா), விஜிதா (வலி.தென்மேற்கு பிரதேச சபை), ராதிகா (காரைநகர் யாழ்ரன் கல்லூரி), பிரபாகரன் (வலயக்கல்வி அலுவலகம் - மருதனார்மடம்) ஆகியோரின் மாமனாரும்,

திருவிளங்கம், திருப்பதிதேவி, துரைசிங்கம், கணேஸ்வரன் ஆகியோரின் மைத்துனரும்,

அருவிகா, கம்சிகா, அன்பிதன், அகரன், கஜேந்திரா, மதுரங்கா, பிரவீனா, சதுர்சிகா, டிசான், தரணிகன் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-02-2025 வௌ்ளிக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சங்கானை கரைச்சி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/02/2025 05:00)