திருமதி கமலாம்பிகை நவரட்ணம்
மறைவு: 16 ஜூன் 2024
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நவரட்ணம் அவர்கள் 16-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. வடிவேலு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, மாலாவதி ஆகியோரின் அன்பு தாயாரும்,
ஐங்கரனின் அன்பு மாமியாரும்,
அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 22-06-2024 சனிக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணிக்கு பின்னர் இல-28, கொலிங்வூட் பிளேஸ், கொழும்பு -06 இல் உள்ள அன்னாரின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு, 23-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
