திரு. கனகசபை சிவலிங்கம் (சிவம்)
மறைவு: 02 ஆகஸ்ட் 2026
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவை வாழ்விடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கனகசபை சிவலிங்கம் அவர்கள் 02-08-2026 ஞாயிற்றுக்கிழமை இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், நெடுந்தீவு 13ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனகசபை - சிவகாமிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், நயினாதீவு 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் - சிவபாக்கியம் தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
நாகாம்பிகை (வளர்மதி) அவர்களின் ஆருயிர் கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
