திருமதி. கனகாம்பிகை கருணாகரன்

கனகாம்பிகை கருணாகரன்

தோற்றம்: 08 ஜூன் 1960 - மறைவு: 28 ஜூன் 2025

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், இல - 10/5, பாத்தியா மாவத்தை, களுபோவில, தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கனகாம்பிகை கருணாகரன் அவர்கள் 28-06-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையாப்பிள்ளை விஸ்வலிங்கம் - செல்வராணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் - செல்வராணி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

கருணாகரன் (Swiss Link Communication - உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானகௌரி, சிவானந்தராசா, சாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திக்குமார், மனோகரன், யோகேஸ்வரன், பாஸ்கரன், காலஞ்சென்றவர்களான வரேந்திரன், சபாநடேசன் மற்றும் ஸ்ரீலதா, கஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்செல்வி (ஆசிரியை - கோண்டாவில்), காலஞ்சென்ற விஜயா (ஆசிரியை - பம்பலப்பிட்டி) ஆகியோரின் சகலியும்,

சயந்தன், சகானா ஆகியோரின் பாசமிக்க சித்தியும்,

நரேஷ், டர்னிச்சன், கிஷாலவன், தேசிகன், சஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

நிவேதியா, ரசிகா, கீர்த்தி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 - 5:00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டு, 30-06-2025 திங்கட்கிழமை காலை 7:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/06/2025 04:00)