திரு. கந்தையா இலட்சுமிகாந்தன்

கந்தையா இலட்சுமிகாந்தன்

தோற்றம்: 09 செப்டம்பர் 1950 - மறைவு: 16 பெப்ரவரி 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், குரும்பசிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா இலட்சுமிகாந்தன் அவர்கள் 16-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா தையல்முத்து தம்பதியரின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதியரின் அன்பு மருகனும்,

இராஜேஸ்வரி (ராஜேஸ் - குரும்பசிட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுகாந்(லண்டன்), அனந்(லண்டன்) , றஜீந்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனுஜா, ஜெயபிரபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தெட்சனாமூர்த்தி, பாலசுப்பிரமணியம், தனபாக்கியம், குணபாக்கியம்,இரத்தினசபாபதி,வரதராசா மறும் கணேசன்(கனடா)  ஆகியோரின் அன்புச் சகோதரனும், 

அனோஜன், கரிஸ், அனிஸ், அஸ்விகா, றியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் அன்னாரது குரும்பசிட்டி இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சுழிபுரம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2025 05:00)