திருமதி. கந்தையா பத்மாவதி

கந்தையா பத்மாவதி

தோற்றம்: 10 மார்ச் 1957 - மறைவு: 01 செப்டம்பர் 2026

யாழ். கொக்குவில் மேற்கு, ஜயனார் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிட மாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தையா பத்மாவதி அவர்கள் 01-09-2026 செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பிள்ளையம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

சுந்தரலிங்கம் காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், கந்தசாமி மற்றும் மங்களேஸ்வரி, இந்திரவதனம், வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பராசக்தி, சாரதாம்பாள், காலஞ்சென்ற சிவலிங்கம், செல்வராஜா, சுரேந்திரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/09/2026 00:00)