திரு. கந்தையா சபாரட்ணம் (குட்டிமுத்து)
(இளைப்பாறிய RMP)
மறைவு: 28 ஜனவரி 2025
யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைச் சேர்ந்த திரு. கந்தையா சபாரட்ணம் அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் கண்ணகை (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜேந்திரன், காலஞ்சென்ற கயல்விழி, எழிலரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசாம்பாள், இராஜரட்ணம் (பொன்னு அண்ணை), செல்வரட்ணம் (வாவி - UK), ஆகியோரின் பாசமிகு சகோதரனும்.
மேகலா, சந்திரகுமார், அன்ரன் யோகநாயகம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மேனன்- லக்சனா நிலாணி, அபினயன், தாரணி, ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
