திரு. கந்தையா சிவலிங்கம் (ராசா அண்ணா)

(உரிமையாளர் மயூரா லொறி)

கந்தையா சிவலிங்கம் (ராசா அண்ணா)

தோற்றம்: 19 ஜனவரி 1953 - மறைவு: 05 ஜூன் 2026

யாழ் இளவாலை மமாரீசன்கூடலைப் பிறப்பிடமாகவும், 3ம் கட்டை கொக்குவில் மற்றும் மாரீசன்கூடலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சிவலிங்கம் (ராசா அண்ணா) அவர்கள் 05-06-2026ம் திகதி வெள்ளிக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா, தங்கம்மா (மாரீசன்கூடல்) தம்பதியரின் சிரேஷ்ட புத்திரனும், 

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நாகரத்தினம் (அச்சுவேலி வளலாய்) தம்பதியரின் அன்பு மருமகனும்,
 
தனலட்சுமி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
மயூரகாந்த் (கனடா), வத்சலா (நியூசிலாந்து), கமலகாந்த் (லண்டன்), சசிகாந்த், வனஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், 
 
துஸ்யந்தி, திவாகரன், நிறுத்யா, கோபிகா, லோகபிரசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
கியான், கியாரா, ஜெய்விக்னா, திறீசன், அய்ஷன், ராகவி, ஹேஷிபர்வதி, ஆகியோரின் பாசமிகு பேரனும்,
 
சிவாறோநிதி, இரத்தினலீலா, சிவகுமார், ரேணுகா ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் அச்சுவேலி வளலாயில் உள்ள அவரது  இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகள் நாளை 09-06-2026ம் திகதி செவ்வாய்கிழமை  பிற்பகல் 12:00 மணியளவில் நடைபெற்று பின்னர் வளலாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 
 
விமான நிலைய வீதி,
வளலாய், அச்சுவேலி.

தொடர்புகளுக்கு:

சசி: 077 502 9211

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/06/2026 02:49)