திரு. கந்தசாமி பொன்னம்பலம் (பொன்னி அண்ணா)
(இளைபாறிய சுங்க ஆணையாளர்)
தோற்றம்: 22 பெப்ரவரி 1936 - மறைவு: 24 ஆகஸ்ட் 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. கந்தசாமி பொன்னம்பலம் அவர்கள் 24-08-2026 திங்கட்கிழமை அன்று அதிகாலை கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - தங்கம்மா தம்பதியினரின் அன்பு புதல்வரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் (பயில்வான்) - பரமநாயகி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற மாகாலக்ஷ்மிதேவி (குட்டியாச்சி) அவர்களின் அன்பு கணவரும்,
வாசுகி, கதாதரன், பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சபாநாதன், சுகந்தி, சௌமியா ஆகியோரது மாமனாரும்,
ஜீவிதன், பார்கவி, ஆதர்க்ஷ், ஆனிக்ஷ், அக்ஷை, அகிலேக்ஷ், அக்ஷரா, ஆகியோரின் பேரனும்,
யுவன், ஜான்வி, ஆரியன், வேதாந்த் ஆகியோரின் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான உருத்ராபதி, மகாலக்ஷ்மி, சோமசேகரம், பாக்யலக்ஷ்மி, தனலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி, ராதாகிருக்ஷ்ணன், மற்றும் ஜெயலக்ஷ்மி அவர்களின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
வாசுகி:-+61 416 099 247
கதாதரன்:- +1 647 542 2147
பிரதீபன்:- +44 790 519 8621
www.tamilthakaval.org
