திருமதி கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி

கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி

தோற்றம்: 02 ஜூன் 1957 - மறைவு: 18 செப்டம்பர் 2026

யாழ் சுழிபும் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம் கண்ணகி அம்மன் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட கோவேந்திரநாதன் இராஜேஸ்வரி அவர்கள் 18-09-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
 
காலஞ்சென்ற கோவேந்திரநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சுதந்தி்னி(சரிதா ), சுரேஸ், சுமதி, விநாயகச்செல்வம் (செல்வா ) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
செல்வராஜ், சிவஜோதி, சத்தியசீலன், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
 
துஸ்மிதா , லக்ஷிகா , சக்திவேல், சந்தோஷ், சஞ்சீவ், கார்த்தி, சாலினி, பவன், சஹானா , ஜெய்வின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக அவரது இல்லத்தி்ல் வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து 21-09-2026 திங்கட்கிழமை அன்று இ்றுதிக்கி்ரியை நடைபெற்று பின்னர் திருவடிநி்லை இந்து மயானத்தி்ல் தகனம் செய்யப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சரிதா - மகள் Mobile : +94 77 676 6700
சுரேஸ் - மகன் Mobile : +33 60 324 5394
சுமதி - மகள் Mobile : +33 69 563 0319
செல்வா - மகன் Mobile : +33 66 314 8716

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/09/2026 00:49)