திரு. கிருஷ்ணபிள்ளை கிருஸ்ணராசா
(இளைப்பாறிய பிரதம இலிகிதர் - இலங்கை மின்சார சபை, நிர்வாக உத்தியோகத்தர் - வதிரி ஸ்ரீ பரமானந்தா சிறுவர் முதியோர் இல்லம்)
தோற்றம்: 23 நவம்பர் 1951 - மறைவு: 06 டிசம்பர் 2025
யாழ் நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், நெல்லியடி கிழக்கு அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கிருஷ்ணபிள்ளை கிருஷ்ணராசா (இளைப்பாறிய பிரதம லிகிதர் இலங்கை மின்சாரசபை நிர்வாக உத்தியோகத்தர், ஸ்ரீ பரமானந்த சிறுவர், முதியோர் இல்லம்) அவர்கள் 06-12-2025ம் திகதி சனிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை - மாணிக்கம் தம்பதியினரின் மகனும், புண்ணிய மூர்த்தி - பரமேஸ்வரி தம்பதியினரின் மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
பிருந்தாபன் (அஞ்சல் அதிபர் - சுன்னாகம்), செந்தூரன் (Shiradi Engineerings (PVT) Ltd), நிலானி (நிறைவேற்று அதிகாரி அகரம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரணவனின் (Smart Construction Management நிறுவனர்) சிறிய தந்தையும்,
சுகந்தி (ஆசிரியர்- யாழ். கரணவாய் தாமோதர வித்தியாலயம்), சாயிசரணியா (வங்கி உத்தியோகத்தர் சம்பத் வங்கி - மானிப்பாய் கிளை), அனோஜன் (பொறியியலாளர் ) ஆகியோரின் மாமனாரும்,
கிருஷ்ணானந்தன், காலஞ்சென்ற கிருஷ்ணதேவி, கிருஷ்ணகுமார், கிருஷ்ணபாலன், கிருஷ்ணயோகன், கிருஷ்ணாகரன் (முன்னாள் அதிபர் - மாணிக்கவாசகர் வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆச்சிரம வீதி, நெல்லியடி, கரவெட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் ஆலங்கட்டை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
