டாக்டர். குமாரவேலு குமாரசூரியர்
(யாழ். இந்துக் கல்லூரி பழைய மாணவர்(1982 A/L), குழந்தை நல மருத்துவர்- Health First Community Health Center, Priority Primary Care - Kentucky, USA)
தோற்றம்: 09 பெப்ரவரி 1963 - மறைவு: 28 செப்டம்பர் 2021
யாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஐக்கிய அமெரிக்கா Tennessee ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட Dr. குமாரசூரியர் குமாரவேலு, MD, அவர்கள் 26-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரவேலு மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும்,
லியோட் ஜோர்ச் பேர்சில், காலஞ்சென்ற மற்றில்டா பேர்சில் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
எலிசபெத் குமாரவேலு அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மகேஷன், ஆனந்த், திவ்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவானந்தன், சச்சிதானந்தன், குகனானந்தன், சரவணபவானந்தன், சிவபாதம், இராஜேஸ்வரன், கைலாசநாதன், ஞானபூரணி, கேதாரபூரணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சறோஜினிதேவி, பரிமளா, ஜெயமலர், நாகரெத்தினம், ரூபராணி, ஜெயகெளரி, நகுலேஸ்வரி, ஸ்ரீதரன், ஞானகாந்தன, கரோல் பேர்சில், இவோன் பேர்சில், பிரான்சிஸ் பேர்சில் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
