திருமதி. லீலாவதி தில்லைநாதன் (முத்து)

(ஓய்வுநிலை ஆசிரியை - திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரி, ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி)

லீலாவதி தில்லைநாதன் (முத்து)

தோற்றம்: 15 ஆகஸ்ட் 1940 - மறைவு: 16 ஜூலை 2026

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இல- 336, அன்புவழிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. லீலாவதி தில்லைநாதன் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான எஸ்.சங்கரப்பிள்ளை - செல்லம்மா (ஓய்வுநிலை அதிபர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை - வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தில்லைநாதன் (ஓய்வுநிலை ஆங்கில விரிவுரையாளர் - கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகம்) அவர்களின் அன்புத்துணைவியாரும்.

Dr. பாடினி (விசேட வைத்திய நிபுணர் - மாவட்ட பொது வைத்தியசாலை, திருகோணமலை) அன்புத் தாயாரும்,

Dr. ம. குகசீலனின் (விசேட கண்சத்திர சிகிச்சை நிபுணர் - தள வைத்தியசாலை, கந்தளாய்) அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ருக்மணி (ஓய்வுநிலை அதிபர் - திரு. மெதடிஸ்ட் பெண்கள் கல்லூரி), தங்கராசா, கமலாவதி, நேசமணி (ஓய்வு நிலை ஆசிரியை - திரு. ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான வே.சிறிதரன், எஸ். சண்முகசுந்தரம், சா.வேலுப்பிள்ளை (ஓய்வுநிலை அதிபர் - திரு. ஸ்ரீ கோணேஸ்வரா வித்தியாலயம்), க. கிருபைதாசன்(ஓய்வுநிலை ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அஞ்சனா, அர்த்தனா (மாணவிகள் - திரு. ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 17-07-2026 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/07/2026 00:00)