பேராசிாியா். மா. செல்வராஜா
(வேந்தர் - கிழக்கு பல்கலைக்கழகம்)
தோற்றம்: 14 அக்டோபர் 1948 - மறைவு: 27 ஜூலை 2025
மட்டக்களப்பு - முனைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்லடியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. மானாகப்போடி செல்வராஜா அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மானாகப்போடி - சங்குபதி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்றவர்களான நல்லையா - இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
குணலெட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. கிரிதரன் (பொறுப்பு வைத்திய அதிகாரி - பிரதேச சபை, பாலமுனை), கௌரி (Lead IT and Biomedical Engineer - இலண்டன்), ரிபுசுதன் (ஆசிரியர் - அம்பாறை இராணமடு இந்து கல்லூரி) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அருள்நந்தி (Senior Biomedical Engineer - இலண்டன்) பாசமிகு மாமாவும்,
(டினோஜ், கிரித்திக் - இலண்டன்) ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தயாசீலன் (ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர்), காலஞ்சென்ற இன்பராசா, பத்மாவதி (ஓய்வுபெற்ற ஆசிரியை), புனிதவதி, வில்வரத்தினம் (பிரதி பிரதம செயலாளர் - நிர்வாகம் கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவேந்திராதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை), ஜெகதீசன் (ஓய்வுபெற்ற சமுர்த்தி உத்தியோகத்தர்), குமாரசாமி, சிவப்பிரியா (பிரதேச செயலாளர் - மண்முனை வடக்கு) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தில்லையாப்போடி, செல்லத்துரை, ஞானமுத்து, முத்தையாப்போடி, செல்லத்தங்கம், சங்குபதி, கேசகாபபோடி, அழகிப்போடி ஆகியோரின் ஒன்றுவிட்ட மருமகனும்,
காலஞ்சென்றவர்களான கறுப்பாத்தை, அன்னப்பிள்ளை, பிள்ளையம்மா மற்றும் மணியம்மா ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான கன்னிப்பிள்ளையம்மா - பிள்ளையான், நல்லம்மா - சீனித்தம்பி ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் உடலம் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 28-07-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 10:00 - 1:00 மணி வரை கிழக்கு பல்கலைக்கழகம் நல்லையா மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மீண்டும் அன்னாரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4:00 மணியளவில் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
முகவரி:-
இல-07, முதலாம் குறுக்கு
பிள்ளையார் கோவில் வீதி,
கல்லடி, மட்டக்களப்பு.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
