திரு. மகேஸ்வரன் தனேசன்

(ஆங்கில ஆசிரியர் யாழ் வீமன்காமம் மகாவித்தியாலயம்)

மகேஸ்வரன் தனேசன்

தோற்றம்: 27 அக்டோபர் 1974 - மறைவு: 22 ஜனவரி 2023

யாழ் வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் பெரிய மதவடியை வசிப்பிடமாகவும் கொண்டவரும், யாழ் /வீமன்காமம் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியருமான மகேஸ்வரன் தனேசன் அவர்கள் இன்று  22-01-2023ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் இரத்தினேஸ்வரி தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான செந்திநாதன் வேதநாயகம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

தமிழ்ச்செல்வி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம்,உடுவில்) அவர்களின் அன்புக் கணவரும்,

கவிசன் (யாழ்/ கொக்குவில் இந்துக்கல்லூரி ஆரம்ப பாடசாலை  மாணவன்), வர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தனஞ்செயன் (அமெரிக்கா) அவர்களின் அன்புச் சகோதரனும்,
 
சுதாகினி (பிரான்ஸ்), றூபச்சந்திரன் மோகனா, சதிஸ்கண்ணன் (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23-01-2023ம் திகதி திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
விலாசம்:-
 

 
பெரிய மதவடி,
சுன்னாகம் தெற்கு
சுன்னாகம்,யாழ்ப்பாணம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/01/2023 13:51)