திருமதி. மங்கயக்கரசி குணரத்தினம் (ஆச்சி)
தோற்றம்: 17 ஜூலை 1942 - மறைவு: 31 டிசம்பர் 2022
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தரோடை பருத்தியோலை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயக்கரசி குணரத்தினம் அவர்கள் 31-12- 2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புத்திரியும்,
காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
சைலஜி (சுது- ஐக்கிய அமெரிக்கா), பிரசாத் (அஜித் - கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஈஸ்வரன் (ஐக்கிய அமெரிக்கா), பாலினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியாலன் அவர்களின் அன்புப் பாட்டியும்,
ஸ்ரீரத்தினம் (அப்பு- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கங்கேஸ்வரன், மகேந்திரன் (துரையன்- கொழும்பு), சண்முகேந்திரன் (அப்பன்- ஜேர்மனி), மாலினி (ரதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் (Mahinda Florist, Mount-Lavania) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து பொது மயானத்தில் (Mount-Lavania Cemetery – Hindu Section) தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
