திருமதி. மங்கையற்கரசி அப்புத்துரை
தோற்றம்: 17 மார்ச் 1935 - மறைவு: 17 நவம்பர் 2025
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கையற்கரசி அப்புத்துரை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - நாகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற அப்புத்துரை (நெற்களஞ்சிய பொறுப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
நல்லருளானந்தம், பூபாலசிங்கம், பூபதி அம்மா, பத்மநாதன், துரைராஜா, பாலச்சந்திரன், அரியநாயகம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பாலசாந்தினி (பபியா - அமெரிக்கா), வரதராஜன் (இலண்டன்), வசந்தினி (தெஹிவளை) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
பாஸ்கரதேவன் (அமெரிக்கா), கிரிஜா (இலண்டன்), லோகீஸ்வரன் (தெஹிவளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஞ்ஜீவ் - உன்னா (கனடா), சிவானி - ராயன் (அமெரிக்கா), ஜானகி - ரீட்டா (அமெரிக்கா), கஜன் - பிருந்தா (இலண்டன்), ஜெகன் - ரம்யா (இலண்டன்), ராம் (இலண்டன்), சாய்லக்ஷ்மி (தெஹிவளை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சிரியா, மீரா, கிரேஷன், ஸ்கைலர், ஆதிரா, ரியா, வீரா, தாரகை, ரிஸ்ரன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 26-11-2025 புதன்கிழமை அன்று காலை 8:00 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 11:00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
