திருமதி. மருதமுத்து தனலக்‌ஷிமி

மருதமுத்து தனலக்‌ஷிமி

தோற்றம்: 05 பெப்ரவரி 1942 - மறைவு: 09 ஜூலை 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மருதமுத்து தனலக்ஷ்மி அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாவு-செல்லம்மா தம்பதியினரின் செல்வப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம்-பாப்பம்மா தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற மருதமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

நாகரெத்தினம், சந்திரசேகர், முரளிதரன், செந்திமதி, விக்னராஜா, சண்முகராஜா, பார்த்தீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பம்மா, எசக்கி, கனேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-07-2024 வியாழக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனக்கிரியைக்காக கோம்பயன் மணல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:- 

இல- 10, 1ம் ஒழுங்கை பிறவுண் வீதி,

நீராவியடி, யாழ்ப்பாணம்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/07/2024 04:00)