திரு. முருகேசு சொர்ணலிங்கம்

(முன்னாள் அதிபர்- யாழ். தந்தை செல்வா தொடக்கநிலைப் பள்ளி S.L.P.S.1)

முருகேசு சொர்ணலிங்கம்

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1947 - மறைவு: 18 அக்டோபர் 2021

யாழ். பருத்தித்துறை 3ம் குறுக்குத்தெருவைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை சந்தை வீதியை வதிவிடமாகவும், கோண்டாவில் பாடசாலை வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட முருகேசு சொர்ணலிங்கம் அவர்கள் 18-10-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் மருமகனும்,

தேவராணி அவர்களின் அன்புக் கணவரும்,

தேவலிங்கம் (ஆசிரியர்), ஜீவகுமாரன் (கனடா, விவசாயபீடம் 19ம் அணி), பிறேமலதா (ஆசிரியை), தருமதன் (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சகிலா, சிவரஞ்சினி, ரகுபரம் (A.D.O) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகி, சுந்தரலிங்கம், நடராஜலிங்கம், யோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, இந்திராணி மற்றும் சிறீஸ்கந்தராஜா, உருத்திரசேனன், பாக்கியராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கோபிதா, நிவேதன், ஹிரிசான், தன்விகா, ஹஜானன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/10/2021 13:06)