திருமதி. முருகேசு விஜய சரோஜினிதேவி
மறைவு: 05 டிசம்பர் 2024
யாழ். காரைநகர் கோவளத்தை பிறப்பிடமாகவும், வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு விஜய சரோஜினிதேவி அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம்- பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு-பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
நாகரூபி, நந்தினி, நந்தரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார், சிவகரன், சரணியா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06-12-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரின் மகிழங்குளம் இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
