திரு. முருகேசு விஜயமோகன்
தோற்றம்: 08 செப்டம்பர் 1956 - மறைவு: 05 செப்டம்பர் 2025
யாழ். சுதுமலை தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. முருகேசு விஜயமோகன் அவர்கள் 05-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு -அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி - மங்கையற்கரசி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
லலிதகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
துவாரகன் (MLT - Green Hospital, Manipay) அவர்களின் அன்புத் தந்தையும்,
சிவயோகம் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற லோகராணி, பத்மாவதி, சூரியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-09-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
