திரு. நல்லையா ஜெயவீரசிங்கம் (தங்கன்)

(பிரபல தொழிலதிபர் - SNJ Travels, SNJ Transport, SNJ Group (Sri Lanka) & Thirumalaiyan Tours and Travels (India))

நல்லையா ஜெயவீரசிங்கம் (தங்கன்)

தோற்றம்: 21 அக்டோபர் 1955 - மறைவு: 27 ஜூலை 2025

யாழ். கரணவாய் வடக்கு நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மற்றும் இந்தியா - சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. நல்லையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேரந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா - செல்வராணி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வளர்மதி (மதி) அவர்களின் ஆசைக்கணவரும்,

வதனா (இலண்டன்), நிருபனா (இந்தியா), மதுஜா (கனடா), சிந்துஜன் (இலண்டன்), கோபிகா (இலண்டன்) ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 03-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது கண்டி வீதி, சாவகச்சேரியில் அமைந்துள்ள இல்லத்தில் நடைபெற்று, உடலம் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/08/2025 04:00)