செல்வி. நாராயணமூர்த்தி தாட்சாயினி

நாராயணமூர்த்தி தாட்சாயினி

மறைவு: 26 மே 2026

யாழ். கோப்பாய் மத்தி, முத்துமாரி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. நாராயணமூர்த்தி தாட்சாயினி அவர்கள் 26-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், புத்தூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தி.சுப்பிரமணியம் - சு.தெய்வானைபிள்ளை, கோப்பாயை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சி.சிற்றம்பலம் - சி.சிவபாக்கியம் ஆகியோரின் பேத்தியும்,

சு.நாராயணமூர்த்தி (ஓய்வூதியர் - யாழ். போதனா வைத்தியசாலை) - ந.சாந்தநாயகி தம்பதியினரின் புதல்வியும்,

ந. காந்தரூபன் (யாழ் பல்கலைக்கழக நூலக அலுவலர்) அவர்களின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தில்லை அம்பலவாணர், சு.தில்லை சிவலோகநாதன், சு.பரமேஸ்வரன் ஆகியோரின் பெறாமகளும்,

சி.நல்லைநாதன், சி.செந்தில்நாதன், சி.அச்சுதானந்தன் ஆகியோரின் மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-05-2026 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் கோப்பாயில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோப்பாய் கந்தன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94 77 985 3750

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2026 00:00)