திருமதி. நிஷாந்தினி நித்திலவர்ணண்

(ஆசிரியை - யாழ். ஹாட்லிக் கல்லூரி)

நிஷாந்தினி நித்திலவர்ணண்

தோற்றம்: 08 நவம்பர் 1981 - மறைவு: 10 டிசம்பர் 2025

யாழ். பருத்தித்துறை ஐயனார் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. நிஷாந்தினி நித்திலவர்ணன் அவர்கள் 10-12-2025 புதன்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.

அன்னார், ஜெயவசீகரன் (ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) - விஜயராணி தம்பதியினரின் மூத்த புதல்வியும், ஆனந்தமயில் - நகுலேஸ்வரி தம்பதியினரின் மருமகளும்,

காலாநிதி. ஆ. நித்திலவர்ணன் (துறைத் தலைவர் - யாழ். பல்கலைக்கழக கல்வியியற்றுறை) அவர்களின் அன்பு மனைவியும்,

தக்‌ஷனா (மாணவி - யாழ். மெதடிஸ்த் பெண்கள் உயர்தர பாடசாலை), கிருஜன் (மாணவன் - யாழ். ஹாட்லிக் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிறோஜினியின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-12-2025 வௌ்ளிக்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் சுப்பர்மடம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

 

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2025 23:19)