Mr. Pichchai Ganeshamoorthy
Date of Birth: 05 October 1958 - Deceased: 19 April 2025
கண்டி - நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், இல-65/68, காக்கைதீவு, கொழும்பு-15 யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பிச்சை கணேஷமூர்த்தி அவர்கள் 19-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிச்சை - நவமணி தம்பதியினரின் கனிஷ்ட புதல்வரும்,
காலஞ்சென்ற ராஜா - லட்சுமி தம்பதியினரின் மருமகனும்,
ஜானகி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரதாஜினி, ரக்சவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகரத்தினம், நடராஜ், சீதாலக்ஷ்மி, விஜயலக்ஷ்மி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-04-2025 திங்கட்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
