திரு. பொன்னையா இரத்தினம்
தோற்றம்: 09 நவம்பர் 1946 - மறைவு: 02 ஜனவரி 2022
யாழ். நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி அலுக்கைச் சந்தியடியை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா இரத்தினம் அவர்கள் 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் தவப் புதல்வரும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கிருபநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
குமாரசாமி, காலஞ்சென்ற சபாரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசீகரன் (வசி போட்டோ- நுணாவில்), நிதர்சன் (லண்டன்), பிரகாஸ் (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் தெல்லிப்பழை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜித்தா (அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம், பச்சிலைப்பள்ளி) அஜந்தி (லண்டன்), சிவரூபினி (மென் பொறியியலாளர்)ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பவனுஜ, லக்ஸான், ரக்ஸான்,ரக்ஸ்சன், அபினா, அக்சரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அளவெட்டியில் உள்ள இல்லத்தில் பி.ப 02:00 மணிவரை அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, பின்னர் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நுணாவிலில் உள்ள அவரது இல்லத்தில் கிரியை நடைபெற்று, நுணாவில் குச்சப்பிட்டி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2022 03:03)
