திருமதி. தனபாக்கியம் பூபாலசிங்கம்

தனபாக்கியம் பூபாலசிங்கம்

மறைவு: 16 பெப்ரவரி 2022

யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட பூபாலசிங்கம் தனபாக்கியம் அவர்கள் 16-02-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரேசு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலசிங்கம் (BOC, Batticaloa, Chief Shroff) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற விஜயகுமார் மற்றும் ஜெயகுமார், பாலகுமாரன், விஜயராணி, ஜெயராணி, இந்திராணி, கலைவாணி, கவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருந்தவராணி மற்றும் கமலவதனி, பிருந்தா, சபாநாதன், யோகநாதன், ராஜன், ரவி, ரகு ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான பற்குணராஜா, தங்கேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிரோஷன், நிரோஷினி, Klaudia, Floriean, மயூரன், அனுஷ்கா, அஷ்வன், கரிஷ்வன், சுகிசன், மயூரிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 8:00 மணிமுதல் மகிந்த மலர்சாலையில் (No.591 Galle Road, MT. Lavinia) பார்வைக்காக வைக்கபட்டு பி.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 1:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/02/2022 13:31)