திருமதி. புனிதவதி குமரகுருநாதன்

புனிதவதி குமரகுருநாதன்

தோற்றம்: 06 ஆகஸ்ட் 1946 - மறைவு: 31 ஆகஸ்ட் 2024

யாழ். இணுவில் மேற்கு, "பழமுதிர்ச்சோலை", பரமானந்தவல்லி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புனிதவதி குமரகுருநாதன் அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா-பாக்கியம் தம்பதியினரின் ஏக புதல்வியும்,

காலஞ்சென்ற சிவஞானம்-கனகம்மா தம்பதியினரின் (நாயன்மார்கட்டு) அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற Dr. S. K. நாதன் (மஸ்கெலியா-சரஸ்வதி கலா மன்றம்) அவர்களின் அன்பு மனைவியும்,

Dr. சந்திரகுமார் (D.T.C.O Chest Clinic-பொது வைத்தியசாலை-வவுனியா), Dr. செ. தனவந்தி (தேசிய வைத்தியசாலை-கொழும்பு), த. செல்வந்தி (C.P.L-கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

விவேகானந்தன் (ஈழபதீஸ்வரா் - வெம்பிலி இலண்டன்) அவர்களின் அன்பச் சகோதரியும்,

Prof. இ. செந்தில்நிதி (இலங்கை திறந்த பல்கலைக்கழகம்-கொழும்பு), ச. சர்வலோஜினி (சமுர்த்தி முகாமையாளர் மாவட்ட செயலகம் -வவுனியா), சி. தயாளன் ("Bell"-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ச.லோஜிகன் (மருத்துவபீடம்-B.S.M Belarus), செ.அஞ்சனன் (கொ/றோயல் கல்லூரி), த.லக்‌ஷிகன் (பொறியயல் பீடம்-குயின்ஸ் பல்கலைக்கழகம்-கனடா), த.ஜனுஷிகன் (பொறியியல் பீடம்-குயின்ஸ் பல்கலைக்கழகம்-கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ரேணுகா (இலண்டன்), காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் (ஆயுர்வேத வைத்தியர்-உரும்பிராய்), சுப்பிரமணியம் (சிறைச்சாலை அதிகாரி-நுணாவில்), மயில்வாகனம் (வங்கி முகாமையாளர்-நாயன்மார்கட்டு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கௌசிகா (இலண்டன்), நிஷாகரன் (இலண்டன்), ஹரிஹரன் (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 05-09-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் அன்னாரின் இல்லமான "பழமுதிர்ச்சோலை" இணுவில் மேற்கிற்கு கொண்டு செல்லப்பட்டு, 08-09-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/09/2024 04:00)